For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மரணத்திற்கு நீதி- அட்வான்ஸ் ஆக உண்ணாவிரதம் தொடங்கிய ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஓ .பன்னீர் செவ்ம் தொடங்கினார்

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிடோர் கலந்துகொண்டுள்ளனர்.

காவல்துறை அனுமதி

காவல்துறை அனுமதி

காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காலை 10 மனியிலிருந்துதான் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் காலை 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அப்போது அங்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 மணிக்கே தொடக்கம்

9 மணிக்கே தொடக்கம்

காலை 9 மணிக்கு போராட்டம் தொடங்குவதற்கு காவல் துறையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அவர்கள் 10 மணிக்குத்தான் அணுமதி கொடுத்திருந்தனர். இருந்தாலும், ஓ.பி.எஸ் அணியினர் திட்டமிட்டபடி 9 மணிக்கே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

ஆவடியில் மாஃபா பாண்டியராஜன்

ஆவடியில் மாஃபா பாண்டியராஜன்

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அந்த கட்சியைச் சேர்ந்தவர்களே தனி அணியாக பிரிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அனைவரும் 9 மணிக்கே தங்களின் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசி வருகின்றனர்.

English summary
Chennai Police permitted O.Panneerselvam to start fasting by 10 am. but he started 9am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X