தஞ்சை: ப்ளஸ் 2 மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை- தனியார் பள்ளிக்கு 1வாரம் லீவ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார் வகுப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பதற்றம் காரணமாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நடுப்படுகை பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவரின் மகன் சந்தோஷ்குமார்,17. இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள லூது சேவியர் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

Plus 2 student hanging inside the class rooms in Tanjavur

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிக்கு வந்த அவர், வகுப்பறையில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்காட்டுப்பள்ளி காவலர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

மாணவரின் தற்கொலை சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை விவகாரம் காரணமாக பள்ளிக்கு ஒருவார காலம் விடுமுறை அறிவித்து நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Students find +2 student hanging inside classroom at St Lurthu metric Higher secondry school at Tirukattupalli, in Tanjavur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற