For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கள்: பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2016 சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நேற்று மாலையில் செயற்குழு கூடியது. இன்று மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாநில- மாவட்ட நிர்வாகிகள் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பேச அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பேசிய அனைவரும் 2016 சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும். அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அனைவரது கருத்துக்களையும் கேட்ட பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.குரு, கணேஷ்குமார், துணைத் தலைவர் கே.என்.சேகர், திருக்கச்சூர் ஆறுமுகம், செய்யது அக்பர்அலி, இளைஞரணி அமைப்பாளர் சேலம் ,ரா.அருள், துணைத் தலைவர் மாம்பலம் வினோத்நாடார், துணை செயலாளர் பாபு செல்வராஜ், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், ஈகை தயாளன்,

PMK projects Anbumani as CM candidate

மாவட்ட செயலாளர்கள் ராமகண்ணியப்பன், கோயம்பேடு வி.கே.பாண்டியன், டில்லி பாபு, ஜமுனா கேசவன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் பாலு, அடையாறு வடிவேல், சகாதேவன், ஏழுமலை, பி.கே.சேகர், ஜெய்சங்கர், சாஜா குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Reiterating that it would lead an alternative front to the DMK and the ruling AIADMK in the run-up to the 2016 Assembly polls, the general body of the Paatali Makkal Katchi (PMK) on Friday unanimously decided to project former Union Minister Anbumani Ramadoss as its Chief Ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X