For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா.. "மக்கள் கவிஞன்" இன்குலாப் மறைந்தார்

ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நீங்காத பாடலை விதைத்த மக்கள் கவிஞன் இன்குலாப் இன்று இயற்கை எய்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா பாடல் ஒலிக்காத போராட்டக் களங்களும், கருத்தரங்களும் இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படி, ஒடுக்கப்பட்ட, தலித் மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த குரல் இன்று அமைதியானது. கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும், தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்குலாப். சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை இன்குலாப் என்று விடுதலையின் சின்னமாக மாற்றிக் கொண்டவர்.

Poet Inquilab dies

தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. தராசு இதழில் தொடராக வந்து பின்னர் புத்தகமான துப்பாக்கிகள் பூவாலிகள் என்ற புத்தகம் மிக முக்கியமான படைப்பு. சங்க கால ஔவையை பற்றி நமக்குள்ள பல்வேறு மூடநம்பிக்கைகளை உடைத்து ஒரு உண்மையான தமிழ் ஔவை பெண்மணியை நமக்கு நாடகமாக ஆக்கிக் கொடுத்தவர்.

கீழக்கரை ஊரில் பிறந்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியிலும், பின்னர், மதுரைத் தியாகராயர் கல்லூரியிலும் தமிழ் படித்தவர். சென்னையில் புதுக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவருடைய இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

English summary
The noted Tamil poet Inquilab died today in a Chennai hospital after a brief illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X