• search

வால்டர் தேவாரம் முதல் வெள்ளைத்துரை வரை என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்

By Mayura Akhilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   சரணடைய வர சொல்லி சுட்டு கொன்றுவிட்டதாகா ரவுடிகளின் உறவினர்கள் புகார்- வீடியோ

   சென்னை: 1980 களில் நக்சலைட்டுகளை ஒடுக்க என்கவுண்டரை அறிமுகம் செய்தனர். இதை தொடங்கி வைத்தவர் வால்டர் தேவாரம் ஐபிஎஸ். விஜயகுமார், சைலேந்திரபாபு, வெள்ளைதுரை என என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தமிழக காவல்துறையில் உருவாகினர்

   இந்தியாவுக்கு என்கவுண்டர் அறிமுகமானது அறுபதுகளில்தான் நக்சல்பாரிகளை வேட்டையாட என்கவுண்டரை ஒரு கருவியாக பயன் படுத்தியது காவல்துறை. 2007-ல் தெஹல்கா இதழ் இந்தியா முழுக்க உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

   அதில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் பெயர் எதுவும் இல்லை. ஆனாலும் பெயர் சொல்லக் கூடிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழக காவல்துறையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

   வால்டர் தேவாரம்

   வால்டர் தேவாரம்

   80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

   சந்தன கடத்தல் வீரப்பன்

   சந்தன கடத்தல் வீரப்பன்

   2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் சென்னை கடலில் வைத்து சென்னை மாநகரையே நடு நடுங்க வைத்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணி சுட்டு வீழ்த்தப்பட்டான். அப்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் விஜயகுமார். 2004ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுண்டரில் முக்கிய பங்கு வகித்தவர் விஜயகுமார்.

   திண்டுக்கல் என்கவுண்டர்

   திண்டுக்கல் என்கவுண்டர்

   1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது குளத்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார் . கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது கோவை மாநகர கமிஷனராக இருந்தவர் சைலேந்திரபாபு.

   வெள்ளைத்துரை பிஹெச்டி

   வெள்ளைத்துரை பிஹெச்டி

   என்கவுன்டர் வெள்ளத்துரையை தெரியாத ரவுடிகளே இருக்க முடியாது. திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக 12 ரவுடிகளின் உயிர்களை பறித்திருக்கிறது வெள்ளத்துரையின் துப்பாக்கி தோட்டாக்கள். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த இவர் பி.ஹெச்டி வரை முடித்தவர்.

   வெள்ளைத்துரை ஆபரேசன்

   வெள்ளைத்துரை ஆபரேசன்


   99ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரைக்கு புரொபேஷன் எஸ்.ஐ ஆக வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே ரவுடியை என்கவுண்டர் செய்ய வேண்டியதாகி விட்டது. திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னாடி கழுத்தை அறுத்துக் கொன்ற ரவுடியான கோசிஜன் என்பவனை என்கவுண்டர் செய்தார் வெள்ளைத்துரை.
   சென்னை அயோத்தியா குப்பம் வீரமணி, சந்தன கடத்தல் வீரப்பன் என என்கவுண்டர் லிஸ்ட் நீள்கிறது.

   அம்மன் தரிசனம்

   அம்மன் தரிசனம்

   ரவுடிகளை சுட்டுக்கொன்றாலும் நார்மலாகவே இருப்பாராம். போலீசுன்னா, வால்டர் தேவாரம் சார் மாதிரி இருக்கணும்னு விரும்புவேன். என்கவுன்டர் ஆபரேஷன் முடிச்சதும், ஏதாவது அம்மன் கோவிலுக்கு போவேன். 4,000 பேர் நிம்மதியை நாலு பேர் கெடுக்குறாங்கன்னா அந்த நாலு கிருமிகளை அழிப்பது தவறில்லை என்பது வெள்ளைத்துரை ஸ்டைல்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Walter Issac Devaram He curbed the Naxal menace with an iron hand during his stint as DIG.Vijayakumar IPS took over as CoP in Dec 2001, organized crime was well entrenched in Chennai

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more