தூத்துக்குடி: மக்களை போலீஸ் தேவையில்லாமல் கைது செய்ய கூடாது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை விசாரணை என்ற பெயரில் தமிழக போலீஸ் தொல்லை செய்ய கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை விசாரணை என்ற பெயரில் தமிழக போலீஸ் தொல்லை செய்ய கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் ஒரு வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

Police shouldnt disturb Tuticorin people anymore says, Madurai HC bench

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸ் பலரை விசாரித்து வருகிறது. போராட்டக்காரர்கள் என்று கூறி போலீஸ் பலரை கைது செய்கிறது. இரவோடு இரவாக வீடு புகுந்து போலீஸ் மக்களை கைது செய்வதும் துன்புறுத்துவதும் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தங்க பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். போலீசின் இந்த மோசமான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இதில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு போலீஸ் தொல்லை தரக்கூடாது. விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது. கலவரக்காரர்கள் என அடையாளம் காணப்படாதவர்களிடம், விசாரணை நடத்துவது ஏன், போலீஸ் மக்களிடம் அத்துமீற கூடாது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே?. கேமரா பதிவுகள் இல்லாமல் எப்படி கலவரக்காரர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+