For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சி கூட்டங்களில் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தினால் தான் கூட்டம் வருமா?- வீடியோ

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் ஆடல்,பாடல் நிகழ்சிகளை நடத்தி கூட்டத்தை ஈர்ப்பது, கட்சிகளின் கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டதை சுட்டுகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: தமிழகத்தில் நடக்கும் அரசியல் கட்சிகளில் தற்போதெல்லாம் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே இம்மாதிரியான ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அரசியல் கட்சிகள் வசீகரமான பேச்சாளர்களை இழந்துவிட்டதையே சுட்டிக் காட்டுகிறது.

தமிழகத்தின் திராவிடக் கட்சிகளின் சிறப்பே எதுகை மோனையோடு பேசும் பேச்சளர்கள் தான். ஒரு காலகட்டத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்க வண்டி கட்டிப் போனவர்கள் எல்லாம் உண்டு. அதேபோல் கருணாநிதியின் பேச்சுக்கு இன்றும் இளைஞர்கள் பலர் தீவிர விசிறிகளாக உள்ளனர்.

 Political parties meetings with dance and music

அவர்கள் மட்டுமில்லாமல் வைகோ, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் பேச்சாளர்களுக்காகவே கூட்டம் கூடிய காலமுண்டு. ஆனால், இன்று அப்படியான வசீகரமான பேச்சாளர்கள் இன்று இல்லை. அதனால் கூட்டத்தை ஈர்க்க ஒவ்வொரு அரசியல் கட்சி கூட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் சினிமா பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகளை நடத்தி, தொண்டர்களை கூட்டத்தில் உட்கார வைக்கின்றனர். அதில் சில ஆபாச நடங்களும் அரங்கேறும். சிலர் இம்மாதிரியான நடனங்களைப் பார்ப்பதற்கே கூட்டத்துக்கு வருவது உண்டு.

ஆர்கே நகர் இடைதேர்தல் பிரச்சாரத்தின் போது, கரகாட்டம் உள்பட பல நாட்டுப்புற நடனங்கள் அரங்கேறின.அதில் சில எம்.எல்.ஏக்களும் உற்சாகத்துடன் ஆடியது குறிப்பிடத்தகக்து.

அதேபோல் கூட்டத்தின் ஒவ்வொரு மூலையிலும் டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கபப்ட்டு வருகிறது. பல ஆயிரம் ரூபாய்களை தண்னீரைப் போல் இறைத்துதான் சில நூறு தொண்டர்களைக் கூட்ட வேண்டிய நெருக்கடி நிலை இன்று அனை8த்துக் கட்சிகளுக்குமே ஏற்பட்டுள்ளது.

பிரியாணி, மதுவுடன் நடனங்களும் கட்டாயமாக்கபப்ட்டு வருவது அரசியல் கட்சிகளின் கொள்கை வீழ்ச்சியைக் காட்டுகிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் ஒபிஎஸ் அணியினர் நடத்திய கூட்டத்தில் நடனங்களும் டிஜிட்டல் பேனர்களுமே இதற்கு சாட்சி.

English summary
In political meetings, dance programs conducted to pull the crowd. Once orators dominated the stage and cadres loved their Leaders' speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X