அடுத்த மாதம் பதவிக் காலம் முடியும் நிலையில்.. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சங்கராச்சாரியார் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வருகை தந்து காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜியை ஆட்சியர் பொன்னையா வரவேற்றார். அதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு அவர் சென்றார். அங்கு அவர் சங்கராச்சாரியாரை சந்தித்து பேசினார்.

President visits Kanchi mutt

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகை தந்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

President visits Kanchi mutt

கடந்த மே மாதம் 21ம் தேதியே ஜனாதிபதி காஞ்சிபுரத்திற்கு வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில், அது திடீரென ரத்தானது. அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Pranab Mukherjee has visited Kanchi mutt and met Jayendra Saraswathi today.
Please Wait while comments are loading...