பஸ் ஸ்ட்ரைக்கால் மீட்டர் இருப்பதை மறந்த ஆட்டோ ஓட்டுநர்கள்.. இஷ்டத்திற்கு கேட்பதல் மக்கள் திணறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ் ஸ்ட்ரைக்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பதால் மக்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் முறையை மறந்துவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து முடங்கியுள்ளது.

சென்னையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மற்ற மாவட்டங்களில் இருந்து தனியார் பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை தமிழக அரசு உத்தரவின் பேரில் அரசு பேருந்து வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை

தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள்

அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள்

இந்நிலையில் ஆட்டோக்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையில் மீட்டர் முறையை பயன்படுத்திதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னாபின்னாவென கட்டணம்

கன்னாபின்னாவென கட்டணம்

ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பஸ் ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி கன்னாபின்னாவென கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

அதிக கட்டணம் என்றாலும் கூட போதுமான பஸ்கள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேரம் பேச முடியாமல் மக்கள் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டபடி கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Auto drivers charging more cost due to the bus strike. The public has accused auto drivers forgetting the meter system.
Please Wait while comments are loading...