‘காவிரி’ ரயில் மறியல் எதிரொலி... 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து... மாற்றுப்பாதையில் 5 ரயில்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

Rail roko: 16 express trains cancelled

இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்தின் முதல் நாளான நேற்று 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

* சென்னை எழும்பூர்-மன்னார்க்குடி மன்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16179)

* சென்னை எழும்பூர்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16175)

* சென்னை எழும்பூர்- வேளாங்கண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் (16185)

* சென்னை எழும்பூர்- தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் (16183)

* எர்ணாகுளம்- காரைக் கால் எக்ஸ்பிரஸ் (16188)

* மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615)

* மன்னார்குடி-சென்னை எழும்பூர் மன்னை எக்ஸ்பிரஸ் (16180)

* தஞ்சை-சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16184)

* காரைக்கால்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16176)

* வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் லிங்க் எக்ஸ்பிரஸ் (16186)

* காரைக்கால்- லோக் மான்யா திலக் எக்ஸ்பிரஸ் (11018)

* மன்னார்குடி-மகத் கி கோதி எக்ஸ்பிரஸ் (16864)

* காரைக்கால்-எர்ணாகுளம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் (16187)


இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படும் ரயில்கள்:

* கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் (16616)

* சென்னை எழும்பூர்- திருச்சி எக்ஸ்பிரஸ் (16853)

* திருச்சி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16854)

பகுதி தூரம் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

அதேநேரத்தில் காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரயில் (56513) காரைக்கால்-சிதம்பரம் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (16859) நேற்று எழும்பூர்-திருச்சி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டது. பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் (56514), நேற்று சிதம்பரம்-காரைக்கால் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டது.

மாற்றுப்பாதை:

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16105/06) இருமார்க்கமாகவும், சென்னை எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16101/02) மற்றும் ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (16780) ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Southern Railway has cancelled 16 express trains on Monday night (October 17) due to the 48-hour rail roko by farmers' associations and political parties across Tamil Nadu over the Cauvery issue.
Please Wait while comments are loading...