மன்மோகன்சிங் மானம் முக்கியமா.. 4 சீட்டு முக்கியமா.. ராமதாஸ் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மன்மோகன் சிங்கின் மானம் முக்கியமா 4 சீட்டு முக்கியமா?- வீடியோ

  நீலகிரி: 2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  2ஜி வழக்கில் விடுதலை ஆன ஆ.ராசா குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் மன்மோகன் சிங் குறித்த ராசாவின் கருத்திற்கும் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

  அவர் தனது டிவிட்டில் மன்மோகன் சிங் தற்போதும் நல்லவர்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் ராசாவிற்கு ஊழல் செய்யவும் தெரியும், அதில் இருந்து வெளியே வரவும் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  ராசா பேச்சு

  ராசா பேச்சு

  நேற்று மேட்டுப்பாளையத்தில் பேசிய ராசா " 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். மன்மோகன் சிங்கிற்கும் கூட இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார். அவர் ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருநாவுக்கரசர் மறுப்பு

  ராசாவின் இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து தற்போது ராமதாஸ் தனது டிவிட்டரில் ''மன்மோகன்சிங் மீதான ஆ.இராசா விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்க திருநாவுக்கரசர் மறுப்பு. அதானே.... இப்ப மன்மோகன்சிங் மானம் முக்கியமா.... இல்லை நம்மாளுங்களுக்கு 4 சீட் வாங்குவது முக்கியமா?'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

  மன்மோகன் சிங் நேர்மையானவர்

  மன்மோகன் சிங் மீதான ராசாவின் குற்றச்சாட்டு குறித்தும் ராமதாஸ் பேசியுள்ளார். அதில் '' 2ஜி ஊழல் வழக்கில் என்னை கைது செய்ததன் பலனை மன்மோகன்சிங் நன்றாக அனுபவித்தார்: ஆ. இராசா. எப்படிப் பார்த்தாலும் மன்மோகன்சிங் நேர்மையான தலைவர் தான். அவருக்கு இதெல்லாம் தேவை தான்!'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  தப்பித்துவிட்டார்

  மேலும் 2ஜி தீர்ப்பு குறித்தும் இவர் பேசியுள்ளார். அதில் '' 2ஜி ஊழல் வழக்கு குறித்து மன்மோகன் சிங்குக்கு எதுவுமே தெரியவில்லை: ஆ.இராசா - ஊழலையும் செய்து, அதிலிருந்து தப்பியவர்களுக்குத் தானே அதைப் பற்றி தெரியும்!'' என்று எழுதி இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK member Raja said yesterday that, Manmohan Singh hasn't have any awareness about 2g. He also added that Manmohan thought problem would gone away if police arrested me, but he has faced lot of problems after that. Now Ramadoss replies to Raja, that 'Raja knows to do scam and to escape' he also added the Manmohan still a good person.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற