இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே?: ஓபிஎஸ்ஐ கிண்டலடிக்கும் ராமதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேகர் ரெட்டிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியதை வைத்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோது திருப்பதிக்கு சென்றிருந்தார். அப்போது சேகர் ரெட்டியோடு பன்னீர்செல்வம் இணைந்து எடுத்த போட்டோவும் வைரலாகி வந்தது.

தமிழக அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது குறித்து கருத்து கூறிய சட்ட அமைச்சர் சிவி சண்முகம், ஊழல் செய்தது ஒபிஎஸ்தான் என்றும், சேகர் ரெட்டிக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது என்றார்.

இதையடுத்து, சிவகாசியில் ஞாயிறன்று பேசிய ஓபிஎஸ், சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்புகுறித்து யார் வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்" என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனை கிண்டலடிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாசின் சில கிண்டல் டுவிட்டுகளை பார்க்கலாம்.

எச்சரிக்க வேண்டும்

இந்திய இறையாண்மைக்கு இலங்கை சவால் விடுவதை இனியும் பொறுக்க முடியாது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி எச்சரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

கடமைக்கு எழுதக்கூடாது

மீனவர்கள் கைது பற்றி பிரதமருக்கு கடமைக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் எடப்பாடி நின்று விடக்கூடாது. பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

பெயரை மாற்றி விடுவீர்களா?

மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கு தான் நன்மை: கர்நாடக அமைச்சர் - எப்படி... தமிழகம், கர்நாடகத்தின் பெயர்களை மாற்றிவிடுவீர்களா? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.

Ramadoss talk after casting their vote in Dindivanam

ஏழுமலையானே ஏற்கமாட்டாரே

சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம் - அடக்கடவுளே... இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே? என்று கிண்டலடித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr Ramadoss's one line comments and slams O.Pannerselvam. Ramadoss tweets are rocking in social media.
Please Wait while comments are loading...