For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த சிவாஜியின் சிலையை அகற்றக் கூடாது: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

Ramadoss urges TN govt not to remove Sivjai's statue
சென்னை: சிவாஜி கணேசனின் சிலையை அகற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்ந்தவர். வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.

பிரான்ஸ் அரசின் செவாலியே விருதையும், இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்.

சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். தமது சிறப்பான நடிப்பால் என்னைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.

இத்தனை பெருமைகளைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் தான் அவரது உருவச் சிலை கடந்த 2006-ஆம் ஆண்டில் அவரது நினைவு நாளான ஜூலை 21 ஆம் தேதி கடற்கரைச் சாலையில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.

சிவாஜி கணேசனை சிறப்பிக்கும் வகையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss urged TN government not to remove Sivaji Ganesan's statue citing traffic problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X