அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்
தென்காசி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். தான் அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி தனக்கு பயிற்சி வழங்கியதாக ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து திமுக தொகுதி பங்கீடை செய்து வருகிறது. [Raveendranath]

கனிமொழி அக்கா ஆலோசனை
இந்நிலையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தென் மாவட்டங்களில் கவனம் செலுத்த திமுக தலைமை அவரை அறிவுறுத்தியுள்ளது. அவருடன் அவரின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு ரவீந்திரநாத் விருப்பமனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அக்காவிடம் செல்போனில் பேசினேன். நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகிறேன் என்று ஆலோசனை கேட்டேன். நாங்கள் 5 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் எம்பியாக இருந்துள்ளோம். எனக்கு அப்போது பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அப்போது நான் முதல்முறையாக எம்பியாக சென்றேன்.
ஊக்கப்படுத்தியவர்
நான் மாற்று இயக்கத்தில் இருந்தால் கூட என்னை ஊக்கப்படுத்தி, இந்த இடத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்று எனக்கு பயிற்சியளித்தவர் கனிமொழி அக்கா. இப்போது கூட தென்காசி மாவட்டம் செல்வதாக அவரிடம் கூறினேன். தென்காசி சிறப்பான மாவட்டம், அங்குள்ள நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளேன். சிறப்பான ஏற்பாடுகளை செய்வார்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் என்னால் வர முடியவில்லை. நீங்கள் சென்று வாருங்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications