தேனி அருகே பள்ளி பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: 4 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியார் பள்ளி பேருந்தும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தும், தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கிச் சென்ற ஆட்டோவும் பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Road accident in theni, 4 died

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஓசூர் அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் லாரியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Road accident in periyakulam in theni district, 4 died
Please Wait while comments are loading...