உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ம்ப தப்பு.. சினிமா காமெடியன்களை போல கெஞ்சிய எட்டு கொலை ரவுடி பினு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரவுடி பினு கதறும் வீடியோ ரிலீஸ்!

  சென்னை: சினிமா பாணியில் வீச்சரிவாளால் கேக்கு வெட்டிய ரவுடி பினு சினிமாவில் காமெடி நடிகர்கள் கெஞ்சுவது போலவே போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.

  சென்னை பூந்தமல்லியை மலையம்பாக்கத்தில் கடந்த 6ஆம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை மாநகரத்தை சேர்ந்த அனைத்து ரவுடிகளும் பங்கேற்றனர்.

  பர்த்டே கொண்டாடிய ரவுடி பினுவுக்கு சக ரவுடிகள் பெரிய ரோஜா பூ மாலையை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து சினிமா பாணியில் வீச்சரிவாளால் கேக்கை வெட்டினார் பினு.

  போலீஸிடம் சிக்கினர்

  போலீஸிடம் சிக்கினர்

  ரவுடிகள் அனைவரும் ஒன்றாக சங்கமிருத்திருப்பதை அறிந்த போலீஸ் மாற்று வாகனத்திலும் மாற்று உடையிலும் சென்று அள்ளியது. சில ரவுடிகள் தப்பியோடினாலும் பல ரவுடிகள் மது போதையில் இருந்ததால் ஓட முடியாமல் போலீஸாரிடம் சிக்கினர்.

  தனிப்படைகள் அமைப்பு

  தனிப்படைகள் அமைப்பு

  ஆனால் முக்கிய ரவுடியான பினு உள்ளிட்ட சிலர் தப்பியோடினர். இதையடுத்து பினுவை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

  காரிலேயே சுற்றிய பினு

  காரிலேயே சுற்றிய பினு

  இந்நிலையில் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார் பினு. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போலீஸிடம் இருந்து தப்பிக்க காரிலேயே சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

  உங்க ஜட்ஜ்மென்ட் ராங்கு

  உங்க ஜட்ஜ்மென்ட் ராங்கு

  இந்நிலையில் ரவுடி பினு வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை என்கிறார் பினு. பினுவின் இந்த டயலாக் கந்தசாமி படத்தில் போலீஸிடம் சிக்கும் வடிவேல் உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு என பேசுவதை போல உள்ளது.

  எனக்கு சுகர் இருக்கு

  எனக்கு சுகர் இருக்கு

  மேலும் தனக்கு 50 வயதாவதாகவும் தான் ஒரு சுகர் பேஷன்ட் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தன்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என்றும் கெஞ்சி கதறியுள்ளார் பினு.

  சுகர் மாத்திரை போட்டுட்டு வரவா?

  சுகர் மாத்திரை போட்டுட்டு வரவா?

  அவரது இந்த பேச்சு கலகலப்பு படத்தில் வரும் ‘கை நடுங்குது வீட்டுக்கு போய் சுகர் மாத்திரை போட்டுவிட்டு வரவா‘ என்ற டயலாக்கை போல் உள்ளது. எட்டு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பினு வீச்சரிவாளால் படு ஸ்டைலாக கேக்கை வெட்டினார். இந்நிலையில் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சுவது அவருக்கு என்கவுன்டர் பயத்தை காட்டிவிட்டதாக தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rowdy Binu begged to police that I am not a big rowdy. And I am sugar patient. He also wanted appology. Binu is begging like cinema comedians.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற