For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டாய கல்வி சட்டம்- நடப்பாண்டில் 89 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் 89 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) மூலம் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் என கடந்த ஆண்டு முதல் உத்தரவு அமலுக்கு வந்தது.

இதன்படி மெட்ரிகுலேசன் முதலான தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த குறிப்பிட்ட 3 வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் இடம் ஏழை மாணவர்களுக்கு ஓதுக்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.

கடந்த ஆண்டு இந்த சட்டம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதலே இச்சட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி உரிய ஆலோசனைகளை பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கினர்.மேலும் இந்த சட்டம் தொடர்பாக பள்ளிகளில் விளம்பர போர்டு வைக்கவும் அறிவுறுத்தினர்.

இதன் எதிரொலியாக இந்தாண்டு தமிழகத்தில் 452 தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.

மெட்ரிக் கல்வி துறையில் பக்கம் 42586 பேரும், தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் 43837 பேரும், பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் உள்ள பள்ளிகளில் 2969 பேரும் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கல்வி கட்டணம் ரூ.35 கோடி ரூபாய் இதுவரை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிதியை வழங்க கல்வி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

English summary
The number of RTE admissions in Tamil Nadu has gone up from 49,864 in 2013-14 to 89000 this year, announced school education minister This is nearly a 50% jump over the last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X