For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுமா? தடை கேட்க சசிகலா புஷ்பா திட்டம்?

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதற்கு ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா தடை கோரி மனு தாக்கல்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது வழக்கறிஞர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் லிங்கேஸ்வரனின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சிலரும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளை மாற்றி, பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்க தடை விதிக்க கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக அதிமுக கட்சி, சசிகலா நடராஜன், தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

Sasikala pushpa stay copy

கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிமுக தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் ஒரு நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா புஷ்பா அதிமுக உறுப்பினர் அல்ல என்றும், அவருக்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் கிடையாது, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

சசிகலா புஷ்பா வழக்கறிஞர் விஜயன், சசிகலா புஷ்பா கணவரின் வக்கீல் பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி, சசிகலா முறைகேடாக பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்க முயல்கிறார். சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க தடை விதிக்கவேண்டும் என்றனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

பொதுக்குழு கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கும் சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று பிற்பகல் தகவல் பரவியது. இதையடுத்து வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். மேலும் அடியாட்கள் சிலரையும் அதிமுக தலைமை அலுவலக வாசலில் நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தனர். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்தது. சரமாரியாக விழுந்த அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.

ஆனாலும் விடாத அந்தக் கும்பல் இருவரையும் பிடித்து இழுத்து அடித்தபடியே ஓடியது. போலீஸார் தலையிட்டு காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதில் லிங்கேஸ்வரனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் அய்யோ, அம்மா என்று அலறியபடி ஓடினார். அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அதேபோல சசிகலா புஷ்பாவின் வக்கீலும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கூட்டத்திற்கும், சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கும் சேர்த்து தடை கோரி சசிகலா புஷ்பா நீதிமன்றத்தினை நாடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன் சசிகலா புஷ்பா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலாவை பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்ய நினைத்திருந்த மன்னார்குடி குடும்பத்தினரின் நினைப்பில் மண் விழுந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

Sasikala Pushpa whose advocates were beaten up outside the AIADMK office is contemplating legal measures. Discussions are on to go back to the high court and seek a stay on the AIADMK meet on Thursday which is being held to elect a new general secretary.

60 words

அதிமுக கட்சி விதிகளை மாற்றி, பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்க தடை விதிக்க கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஷ்வர திலகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அவரது கணவர், வக்கீல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பொதுக்குழு கூடுமா, பொதுசெயலாளர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Sasikala Pushpa whose advocates were beaten up outside the AIADMK office is contemplating legal measures. Discussions are on to go back to the high court and seek a stay on the AIADMK meet on Thursday which is being held to elect a new general secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X