காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பது குறித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுக்கள் மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு கர்நாடகா வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

SC reserves judgement over Cauvery

இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பும் தங்களது மனுக்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கை விசாரிக்கலாமா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் அனைத்து தரப்பும் வரும் திங்கட்கிழமைக்குள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court reserves order over Cauvery water issue on appeal of Tamil Nadu, Kerala and Karnataka against tribunal's order of 2007.
Please Wait while comments are loading...