ஷாப்பிங் மால்களாக்கிப் பார்ப்போம் லாபம் வருதான்னு... சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் மக்களை கவரும் விதமாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக மெட்ரோ ரயில்நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக திறந்து வைக்கப்பட்ட திட்டமான மெட்ரோ ரயில் சேவை திட்டம் மெதுவாக மக்களிடத்திலே பிரபலமாகி வருகிறது. இருப்பினும் போதிய வருமானம் கிடைக்காததால், இதன் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

 Shopping malls to be introduced in Metro railway stations.

நேரு பூங்காவிருந்து - விமான நிலையம், சின்னமலையிலிருந்து விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இயங்கி வருகிறது. விரைவில் இந்த சேவை பல புதிய வழித்தடங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவீன வசதியுடன் கட்டமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும், விரைவில் இதன் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டமைப்புகளுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு தற்போது 30 ஆயிரம் வரையில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கை, விரைவில் 2 லட்சமாக உயரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shopping malls to be introduced in Metro railway stations to avoid loss, says Metro railways corporation. And also it adds, soon the new plan will draw more commuters towards metro.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற