For Daily Alerts
Just In
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நில அதிர்வு.. வீதிக்கு ஓடிய மக்கள்!
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு நேற்று நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் வீதிக்கு ஓடினர்.
சென்னையை அடுத்த பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

10 முதல் 15 நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வால், இந்தப் பகுதியில் இருந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர். சிலருக்கு இந்த நிலநடுக்கம் பற்றி எதுவுமே தெரியவில்லை.
ஆனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதே நேரம் சென்னையின் பிற பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.