எச். ராசாக்களுக்கு வயிற்றுப் போக்கை உருவாக்குவதால் கமலை ஆதரிக்கலாம்.. ஆனால்... சுப. உதயகுமாரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எச். ராசாக்களுக்கும் அம்மாவின் கோடீஸ்வர பிள்ளைகளுக்கும் வயிற்றுப் போக்கை உருவாக்குவதால் நடிகர் கமல்ஹாசனை ஆதரிக்கலாம்; ஆனால் முதல்வர் என்பதையெல்லாம் ஏற்க முடியாது என பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொடர்பாக சுப. உதயகுமாரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

வயிற்றுப்போக்கு உர்வாக்கம்

வயிற்றுப்போக்கு உர்வாக்கம்

தமிழிசைகளுக்கும், எச் ராசாக்களுக்கும், அம்மாவின் கோடீஸ்வரப் பிள்ளைகளுக்கும் வயிற்றுப்போக்கை உருவாக்குகிற ஒரே காரணத்துக்காகவாவது கமலகாசனை ஆதரிக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் அரசியல்/பொதுவாழ்வு அனுபவமற்ற நடிகர் என்பதால் தயக்கமும் எழுகிறது.

கூடிப் பேசி இயங்கலாம்

கூடிப் பேசி இயங்கலாம்

ஐயா பழ. நெடுமாறன், தோழர்கள் திருமாவளவன், வேல்முருகன், சீமான், ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி, கே.எம். ஷரீஃப், தனியரசு, தமீமுன் அன்சாரி, நாகை திருவள்ளுவன், குமாரசாமி, மீ.தா. பாண்டியன் போன்றவர்களோடும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத பல்வேறு இயக்கங்களின் தலைவர்களோடும் கூடிப் பேசி, கூட்டாக இயங்க முயற்சிக்கலாம்.

'ஷொட்டும் கொட்டும்

'ஷொட்டும் கொட்டும்

முடிவு எடுத்தால் யாம் முதல்வர்" என்று கமல் சொல்லி இருக்கிறாராமே? அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்த முதல்வர் பதவி ஆசையை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, மற்றவர்களோடு இணைந்து மக்கள் பணியாற்ற வரலாம்.

MGR Daily slammed Actor Kamal Haasan-Oneindia Tamil
கோடம்பாக்க உறவு அறுபடனும்

கோடம்பாக்க உறவு அறுபடனும்

நடிகர்கள் நாடாள நினைக்கக் கூடாது. கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான உறவை அறுத்தே ஆக வேண்டும். போராடும் மக்கள்தான் தமிழகத்தின் தலைவர்கள், முதல்வர்கள்!'

இவ்வாறு சுப. உதயகுமாரன் பதவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Activist SP Udayakumaran posted comments in his FB page on Kamal Hassan's voices against the ADMK Govt.
Please Wait while comments are loading...