வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.. பெயர்களை சேர்க்க… நெல்லை கலெக்டர் அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்துதல் பணி குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது.

அப்போது கலெக்டர் கருணாகரன் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் 18 முதல் 21 வயது கொண்ட புதிய இளம் வாக்காளர்களுக்கென வாக்காளர் பட்டியலில் சிறப்பு சேர்க்கை பணி மற்றும் திருத்த பணி நாளை முதல் தொடங்குகிறது.

Special Camp for voter enrolment

ஜூலை 31-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் பணிகள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள்.

அப்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட இறப்பு பதிவு விவரங்கள்படி நீக்கப்படும். இது தொடர்பான பயிற்சிகள் முக்கிய கல்லூரிகளில் நடத்தப்படும் என கருணாகரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Special Camp will start from tomorrow for voter enrolment and deceased voters remove from the voters list.
Please Wait while comments are loading...