For Daily Alerts
போலீஸ் அனுமதி மறுப்பு.. கடலூரில் நாளை ஸ்டாலின் வாகன பேரணி ரத்து! இன்றே சென்னை திரும்புகிறார்
சென்னை: போலீஸ் அனுமதி மறுத்ததால் கடலூரில் நாளை நடைபெற இருந்த ஸ்டாலினின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்டாலின் நாளை கடலூரில் வாகன பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலினின் வாகன பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இன்று இரவே ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!