கமிஷன் வாங்கியிருப்பாங்களோ.. தஞ்சாவூர் பாலம் விரிசல் விவகாரத்தில் ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: பாலம் கட்டியதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க விசாரண கமிஷன் அமைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Stalin urged inquire commission on the bridge construction work

இந்நிலையில் விரிசலடைந்த பாலத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பாலம் கட்டப்பட்டது தொடர்பாக நடந்த முறைகேடுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிமுக அரசு பாலம் கட்டும் பணியை கிடப்பில் போட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

முறையில்லாத வகையில் கட்டிய காரணத்தால் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.52 கோடியில் கமிஷன் வாங்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin visited the cracker bridge today in Thanjavur. He urged inquire commission on the bridge construction work.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற