சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தார் நடிகர் ரஜினி- வீடியோ

  சென்னை: சூப்பர் ஸ்டார் பட்டத்தை தானாக முன்வந்து துறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

  நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. பைரவி படம் வெளியானது முதல் இந்த பட்டத்தை அவருக்கு தமிழ் திரையுலகம் தொடர்ந்து கொடுத்தே வந்தது.

  பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், குறிப்பாக, 1990களில் இருந்து பாபா வரை தொடர்ந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படங்களை மட்டுமே அவர் கொடுத்து வந்ததால் இந்த பட்டத்திற்கு வேறு யாரும் போட்டி கூட போட முடியாத நிலை இருந்தது.

  மாற்றங்கள்

  மாற்றங்கள்

  பாபாவுக்கு பிறகு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரீமேக் படமான சந்திரமுகியில் நடித்தார். இருப்பினும் இதன்பிறகு நடிப்பில் மாற்றத்தை கொண்டுவந்தார். வெற்றி, தோல்வி பற்றி யோசிக்காமல், கோச்சடையான், குசேலன் போன்ற புதுமுயற்சிகளை எடுத்தார். கபாலி அதில் பேசப்பட்ட ஒரு படமாக மாறியது. சூப்பர் ஸ்டார் என்ற பரிணாமத்தை திரையுலகில் மாற்றியபடியே வந்தார் ரஜினி. அல்லது, அதற்கான அவசியத்தை முதுமை அவருக்கு கொடுத்தது என்றும் சொல்லலாம்.

  மாற்றங்கள்

  மாற்றங்கள்

  பாபாவுக்கு பிறகு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரீமேக் படமான சந்திரமுகியில் நடித்தார். இருப்பினும் இதன்பிறகு நடிப்பில் மாற்றத்தை கொண்டுவந்தார். வெற்றி, தோல்வி பற்றி யோசிக்காமல், கோச்சடையான், குசேலன் போன்ற புதுமுயற்சிகளை எடுத்தார். கபாலி அதில் பேசப்பட்ட ஒரு படமாக மாறியது. சூப்பர் ஸ்டார் என்ற பரிணாமத்தை திரையுலகில் மாற்றியபடியே வந்தார் ரஜினி. அல்லது, அதற்கான அவசியத்தை முதுமை அவருக்கு கொடுத்தது என்றும் சொல்லலாம்.

  அரசியல் கட்சி

  அரசியல் கட்சி

  இந்த நிலையில்தான், தனிக்கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதையடுத்து இப்போது அவரை வெறும் நடிகராக மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகராகவும் பார்க்க துவங்கியுள்ளனர் மக்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் பிரமுகர் என்ற வகையில் அவரிடம் ஊடகங்கள் கருத்து கேட்க துவங்கியுள்ளன.

  டுவிட்டரில் பெயர் மாற்றம்

  டுவிட்டரில் பெயர் மாற்றம்

  சூழ்நிலை மாறிவிட்டதை உணர்ந்த ரஜினிகாந்த், டுவிட்டர் பக்கத்தில் இருந்த தனது பெயரை மாற்றியுள்ளார். 2014ல் டுவிட்டரில் அவர் கணக்கு துவங்கியபோது,
  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- @superstarrajini - என்பதே அவரது ஹேண்டில் பெயராக இருந்தது. அதை இப்போது, @rajinikanth என்று மாற்றியுள்ளார்.

  மாற்றங்கள்

  மாற்றங்கள்

  அரசியலுக்கு வந்துள்ள நிலையில், தானும் ஒரு சாமானியர் என்பதை போல தொண்டர்களுக்கு காண்பிக்கவும், சூப்பர் ஸ்டார் என்பது சினிமாவுக்கான பட்டம், நான் இப்போது அரசியல்வாதி என்பதை அழுத்தமாக பதிய வைக்கவும் ரஜினிகாந்த் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராமில் ரஜினிகாந்த் நேற்று முதல் கணக்கு துவக்கியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth has changed his Twitter handle to Rajinikanth, distancing himself from his 'superstar' status.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற