அடுத்த எலைக்கு பாயாசம் கேக்குறார் பாரதிராஜா! - எஸ் வி சேகர் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் பாரதிராஜா அடுத்த இலைக்குப் பாயசம் கேட்கிறார் என கிண்டலடித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர்.

முட்டாளாக இருந்தாலும், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

SVe Shekar's comment on Bharathiraja's speech

பாரதிராஜாவின் கருத்துக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாரதிராஜா போன்ற மக்கள் அபிமானம் பெற்ற கலைஞர்கள் வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசக் கூடாது என திரையுலகினரும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாரதிராஜாவுக்கு நடிகர் எஸ்வி சேகர் தன் கண்டனத்தை கிண்டலாகத் தெரிவித்து ஒரு ட்விட் போட்டுள்ளார்.

அதில், "முட்டாளாக இருந்தாலும் தமிழ் நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும்..." - பாரதிராஜா. அண்ணன் அடுத்த எலைக்கு பாயாசம் கேக்குறாரு பாரு"" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு ஏகப்பட்ட பேர் எதிர்த்தும் ஆதரித்தும் பதில் கூறியுள்ளனர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor SVe Shekar has condemned Bharathiraja for his speech against Non Tamils in politics.
Please Wait while comments are loading...