For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மறைவு துயரில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்

ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் என்று கேள்விப்பட்டதில் இருந்து ஸ்தம்பித்த தமிழகம் அவரது மரணத்திற்கு பின்னர் முற்றிலும் முடங்கியது. தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் தற்போது மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீண்டு வருகின்றனர்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஞாயிறு இரவு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதய முடக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை.

24 மணிநேர தீவிர சிகிச்சைக்குப் பின்னர் திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. இந்த செய்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அரசு, தனியார் நிறுவனங்கள் நேற்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் செவ்வாய்கிழமை மாலை அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வரின் மரணம் கட்சி சார்பின்றி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

பணிக்கு செல்லும் மக்கள்

பணிக்கு செல்லும் மக்கள்

இந்நிலையில் இன்று காலை முதல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தனியார், அரசு நிறுவனங்களுக்கு அன்றாடம் பணிக்குச் செல்பவர்களால், வெறிச்சோடி கிடந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல ஆரம்பித்துவிட்டன.

இயல்பு நிலை

இயல்பு நிலை

தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தலைநகர் சென்னையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ராதாகிருஷ்ணன் சாலையில் வாகனங்கள் செல்லத் தொடங்கியுள்ளன.

முதல்வரின் வாகனம்

முதல்வரின் வாகனம்

இனி இந்த சாலையில் முதல்வரின் கான்வாய் செல்லப் போவதில்லை, அம்மாவை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்பதுதான் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் சோகம். சட்டசபை நடக்கும் போதும், தினசரி தலைமைச் செயலகத்திற்கு செல்லும் ஜெயலலிதாவைக் காணவும் ஏராளமானோர் ராதாகிருஷ்ணன் சாலையிலும், சென்னை மெரீனா கடற்கரை சாலையிலும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

வணங்கும் தொண்டர்கள்

வணங்கும் தொண்டர்கள்

போயஸ்தோட்டத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பிளெக்ஸ் போர்டுகள் முளைத்திருக்கும். இப்போது அம்மாவிற்கு இரங்கல் என்ற போஸ்டர்கள்தான் முளைத்திருக்கின்றன. ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து மாலையிட்டு வணங்கி வருகின்றனர்.

English summary
After the burial of late chief minister Jayalalitha, Tamil Nadu and the people are limping back to normaly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X