For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானியை கொல்ல சதி: பைப் வெடிகுண்டு சப்ளை செய்த நபர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் பாஜக அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் டேனியல் பிரகாஷ் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல பைப் வெடிகுண்டு சப்ளை செய்ததும் இதே டேனியல் பிரகாஷ்தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் 17.4.2013 அன்று குண்டு வெடித்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான்புகாரி மற்றும் அவரது கூட்டாளிகளும், கோவையை சேர்ந்த சிலரும் ஈடுபட்டது தெரியவந்தது. பெங்களூர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tamil Nadu man sold bombs to target L K Advani

நெல்லையில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கிச்சான்புகாரியின் கூட்டாளிகளான மேலப்பாளையத்தை சேர்ந்த காஜா, செய்யது ஆகியோர் வீட்டில் நடத்திய சோதனையில் 20 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் நெல்லை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் 35, என்பவரையும் கைது செய்தனர். இவர் வெடிபொருள் ஏஜெண்டு எடுத்து கல்குவாரிகளுக்கு வெடி பொருட்கள் சப்ளை செய்து வந்தார்.

இவர்தான் வெடிபொருட்களை கூடுதல் விலைக்கு கிச்சான் புகாரி கூட்டாளிகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. தற்போது டேனியல் பிரகாஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் கொடுத்த வெடி பொருட்கள்தான் பெங்களூர் பாஜக அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது தடயவியல் அதிகாரிகள் சோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பெங்களூர் போலீசார் நெல்லை வந்து, ஜாமீனில் இருந்த டேனியல் பிரகாசை கடந்த வாரம் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தற்போது பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அவரையும் பெங்களூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவரான டேனியல் பிரகாஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவருக்கு தமிழகத்தில் அல் உமா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு மூன்று முறை வெடிகுண்டு சப்ளை செய்து இருப்பதும் தெரிய வந்தது.

டேனியல் பிரகாஷ் கடந்த 2011ல் மதுரை அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல வெடிகுண்டு சப்ளை செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய குற்றவியல் உதவி கமிஷனர் வெங்கடேஷ் பிரசன்னா கூறுகையில், '2012ல் திருநெல்வேலியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தின்போதும், இவர்தான் வெடிகுண்டு சப்ளை செய்துள்ளார் என்று கூறினார்.

பைப் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டேனியல் பிரகாஷ்தான் இந்த பைப் வெடிகுண்டை சப்ளை செய்தார் என்று தெரிய வந்துள்ளதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The vice-president of Pudukudi village panchayat in Tirunelveli, arrested by Karnataka Police officers on Monday in connection with the 2013 blast near the BJP office in Malleswaram, Bengaluru, He also supplied them explosives on at least three occasions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X