• search

என் அய்யா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா.. அன்புமணியை தமிழிசை பதிலடி "கிழி கிழி"!

By Lakshmi Priya
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   தமிழிசை அவதூறு கருத்து, பாஜக - பாமக தொண்டர்கள் மோதல்

   சென்னை: ரயில்வே துறை, சுகாதாரத்துறையில் பாமகவின் பங்கீடு குறித்து அன்புமணி கருத்து தெரிவித்ததற்கு தமிழிசை டுவிட்டரில் சண்டையிட்டுள்ளார்.

   ரயில்வே துறையில் பாமக அமைச்சராக இருந்த போதும் ஏராளமான சீர்திருத்தங்களையும் நல்ல பல திட்டங்களையும் கொண்டு வந்ததாக அன்புமணி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஏன் எய்ம்ஸை கொண்டு வரவில்லை.

   நாங்கள்தானே இப்போது மதுரையில் கொண்டு வந்துள்ளோம் என்றார் தமிழிசை. இப்படி தமிழிசை பதிலடி மூலம் கிழி கிழியென கிழித்துவிட்டார். நீங்களும் பாருங்களேன்...

   மரியாதை

   அய்யா என்றுதான் மரியாதையுடன் அழைக்க என் அய்யா சொல்லி வளர்ந்த எனக்கு தங்கள் பதிவில் உள்ள அய்யோ அய்யோ என நாகரீகமற்ற சொற்றொடர்களை கண்டதும் எங்களுக்கு இல்லாத பொது அறிவு தங்களுக்கு இருப்பதாக தாங்களே கூறிக்கொள்வது என்னை புல்லரிக்கவைக்கிறது நன்றி.

   வாரி சுருட்டவில்லை

   என் அரசியல் அனுபவம் 20 ஆண்டு கால முழுநேர அரசியல் பணி. என் உழைப்புக்கு கட்சி வழங்கிய அங்கீகாரம்தான் நான் படிப்படியாகப்பெற்ற பதவிகள். வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச்சுருட்டவில்லை. பதில் சொல்வதிலும் நாகரீகம் வேண்டும் என்பது தங்களுக்கும் உங்களுக்கு ஆதரவாகபதிவிடுவோருக்கும் தேவை.

   கல்லூரி ஊழல்

   சுகாதாரஅமைச்சராக இருந்த காலத்தில் நாடெங்கும் பல தரமற்ற புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதிகள் வழங்கியதில் நீங்கள் காட்டிய வேகம் விவேகம் ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொணரகாட்டவில்லை?மருத்துவ கல்லூரிஅனுமதி ஊழல் வழக்குக்காக இன்னமும் நீதிமன்றம் அலைவதும் மக்களுக்கு தெரியும்.

   நிழலில் பதவி பெறவில்லை

   நிதி ஒதுக்கியதாகச்சொல்கிறீர்கள். அதன்பின்பும் பாராளுமன்ற உறுப்பினராகத்தொடரும் நீங்கள் எத்தனைமுறை மதுரை எய்ம்ஸ் பற்றி பேசினீர்கள் தர்மபுரிக்கும் எய்ம்ஸ் வேண்டும் என்றுதானே குழப்பினீர்கள்? அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள்.நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை சாதியைவைத்து சாதிக்கவில்லை.

   கொட்டைபாக்கு

   பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல் மத்தியசுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன்தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை என்று கேட்டால் தோப்பூரில் அடிக்கல் நாட்டியதையும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு எய்ம்ஸ் அளவுக்கு உயர்த்த ..

   கோரிக்கை மனு அளிப்பது ஏன்

   மத்தியஅரசின் சுகாதாரஅமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராதது ஏன்?நடுவண் அரசில் தொடர்ந்து இரண்டுமுறை ரயில்வேஇணைஅமைச்சர்களைபெற்ற பாமகஅப்போது தர்மபுரி மொரப்பூர் ரயில்திட்டத்தை நிறைவேற்றாமல் தற்போது ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனுஅளிப்பதுஏன்?

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Tamilisai Soundararajan quarrels with Anbumani Ramadoss regarding Railway portfolio developments and AIIMS in Madurai.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more