For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு!

கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு காய்ந்து கிடந்த பூமி குளிர்ந்துள்ளது. இதே போன்று தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட நீர்நிலைகளும் வெள்ளோட்டம் காண்கின்றன.

 Tamilnadu dams today water level

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, பாபநாசம் அணையில் மொத்த நீர்மட்டமான 91.60அடியில் 2622.40 மி.கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 190.13 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம்: 98.42, அடி, நீர் இருப்பு : 442 மி.கன. அடி, நீர்வரத்து :272.34 கன அடி , அணையில் இருந்து நீர் வெளியற்றப்படவில்லை.

மணிமுத்தாறு : நீர்மட்டம்: 11847.10 அடி, நீர் இருப்பு : 527.20 மி.கன. அடி
நீர் வரத்து : 31 கன அடி, இங்கும் நீர் வெளியேற்றப்படவில்லை.

பவானிசாகர் அணை நிலவரத்தை பொறுத்தவரை நீர்மட்டம் 80.17 அடியாக உள்ளது. நீர் வரத்து
1752கன அடியாகவும், வெளியேற்றம் 155 கன அடியாகவும் நீர் இருப்பு 15.7 டி.எம்.சியாகவும் உள்ளது.

கோவை மாவட்டம் சோலையார் அணையின் நீர்மட்டம் : 145.13, நீர்வரத்து : 1349.18க.அடி., வெளியேற்றம்: 895.48க. அடி யாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம்: திருமூர்த்தி அணயின் நீர்மட்டம்: 36.54அடி, நீர்வரத்து: 596 வெளியேற்றம்: 311கனஅடியாக உள்ளது.

அமராவதி அணையின் நீர்மட்டம்: 83.63அடியாக உள்ளது. நீர்வரத்து: 438க.அடி, வெளியேற்றம்: 309கனஅடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,597 கனஅடியில் இருந்து 13,281 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 2000 கனஅடி தண்ணீரில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது, டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் 81.69 அடியாக உள்ளது.

நீர் வெளியேற்றப்படாததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்களின் வழியாக 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

விவசாயத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குமளி அருகே தலைமதகை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu dams were flooding with increasing water levels and from Mullaiperiyaru dam water released for farming.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X