For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் காவலர்கள் மீது புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமார், விசாரணை அறிக்கைக்கு பின்னர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடி உள்ளது. சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் பல்வேறு பகுதிகளி அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

லாக்டவுன் நீட்டிப்பு: கர்நாடகா மதுபான கடைகளில் காலையிலேயே சாக்கு பைகளுடன் குவிந்த தமிழக குடிமகன்கள் லாக்டவுன் நீட்டிப்பு: கர்நாடகா மதுபான கடைகளில் காலையிலேயே சாக்கு பைகளுடன் குவிந்த தமிழக குடிமகன்கள்

8ம் தேதி பறிமுதல்

8ம் தேதி பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் போலீசார், சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8ஆம் தேதி பறிமுதல் செய்தார்கள். மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர்களையும் பிடித்து சென்றார்கள்.

வேறு நபருக்கு விற்பனை

வேறு நபருக்கு விற்பனை

ஆனால், அதுபற்றி முறையாக வழக்குப்பதிவு செய்யது, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யால், அவரை எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் வேறொரு நபரிடம் விற்றுவிட்டதாக புகார்கள் எழுந்தன.

அறிக்கை அளிப்பு

அறிக்கை அளிப்பு

இதுதொடர்பாக தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவரின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலான அறிக்கையை தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமாரிடம் அளித்தார்.

டிஐஜி உத்தரவு

டிஐஜி உத்தரவு

இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை காவலர்களே விற்ற சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Four policemen, including a police inspector and an sub inspector, have been charged with selling liquor bottles confiscated in Thanjavur to another person.Tanjore DIG Pravesh Kumar has ordered an inquiry into the complaint and sacked four people, including a police inspector and an sub inspector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X