கதிராமங்கலம் போராட்ட குழுவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கதிராமங்கலம் போராட்ட குழுவினரின் ஜாமீன் மனுவை தஞ்சை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்படுவதாக கூறி எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

The bail plea of the Kathiramangalam protest team is going to be heard today in the Thanjavur district court

அவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலம் கிராம மக்கள் கடந்த 3 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்குழுவினர் சார்பில் வழக்கறிஞர் நல்லதுரை தாக்கல் செய்த ஜாமீன் மனு, தஞ்சை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

இதை எதிர்த்து நாளை மேல் முறையீடு செய்யப்படும் என்று வழக்கறிஞர் நலத்துரை தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The bail plea of the Kathiramangalam protest team is going to be heard today in the Thanjavur district court. This is the expectation that nine arrested persons will get bail.
Please Wait while comments are loading...