முழு நேர ஆளுநரை நியமிக்க இப்ப என்ன அவசியம் வந்தது.. சாமி கேட்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டிய தேவை இப்போது என்ன என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவருபவர் சுப்பிரமணியன் சுவாமி. தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியதே தவறு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சசிகலாதான் அதிமுகவின் உண்மையான தலைவர். அதிமுக அணிகள் எல்லாம் கிடையாது. ஒரே ஒரு அதிமுகதான் அது சசிகலா தலைமையில் உள்ள அதிமுகதான்.

 முழு நேர ஆளுநருக்கு என்ன அவசியம்

முழு நேர ஆளுநருக்கு என்ன அவசியம்

தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. தற்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிரத்திலும் தமிழகத்திலும் சிறப்பாகதானே செயல்படுகிறார்.

 அகமது படேல் எதிரி

அகமது படேல் எதிரி

அகமது படேல் எங்களுடயை எதிரி என்பதால் அவரை குஜராத் ராஜ்யசபா தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தோம். வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் சிறை செல்வர்.

 தேவைப்பட்டால் என்ன

தேவைப்பட்டால் என்ன

தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஏன் அதை இப்போதே கொண்டு வரட்டுமே, அதென்ன தேவைப்பட்டால்?

 ஒரு மாசம் தங்க வேண்டும்

ஒரு மாசம் தங்க வேண்டும்

எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கூற வேண்டுமானால் நான் தமிழகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்தால்தான் கூற முடியும் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior BJP Leader Subramanian Swamy says that there is no need to appoint permanent Governor for TN. Acting Governor is doing good.
Please Wait while comments are loading...