இவ்வளவு பெரிய போலீஸ் ஆபரேஷன்ல பினு உட்பட 3 தலைகள் மட்டும் தப்பியோடிட்டாங்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: பூந்தமல்லி அருகே பிறந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடிகளில் 3 பேர் மட்டும் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் ரவுடி பினுவின் பிறந்தநாள் சக ரவுடிகளுடன் நேற்றிரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  Three rowdies escaped in the operation at Chennai Poonamalle: Police

  ஆடல்பாடல் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது ரவுடி பினுவின் பிறந்தநாள். சினிமா பாணியில் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவில் ஏராளமான பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

  இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் ரவுடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

  இதையடுத்து தனியார் வாகனத்தில் மாற்று உடையில் ரவுடிகளை போல சென்றனர் போலீசார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பங்கேற்ற 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

  இந்நிலையில் போலீசாரின் இந்த அதிரடி ஆபரேஷனில் மூன்று ரவுடிகள் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பினு, கனகு, விக்கி என்ற மூன்று ரவுடிகள் மட்டும் தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  அவர்கள் மூன்று பேரும் ஏ கிளாஸ் ரவுடிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய 3 ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police has said that three rowdies escaped in the opration. Rowdy Binu celebrated his birthday yesterday in Chennai Poonamalle. In this birthday fuction three rowdies has been escaped from police. Separate police team have been set up to catch them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற