ஜெயலலிதா மறைந்தது முதல் இன்று வரை .. அடங்காமல் நீளும் அதிமுக அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்றைய தினம் முதல் அதிமுகவில் பிளவு, உள்கட்சி பூசல், மீண்டும் அதிமுக இணைப்பு என பல்வேறு பிரச்சினைகள் நடந்து முடிந்துள்ளன.

தற்போது கட்சியை தன் கைவசம் வைத்துக் கொள்ள டிடிவி தினகரன் தியாகயுத்தம் நடத்தி வருவதாக கிளம்பியுள்ளார். இவரை சமாளிக்க இன்று பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி சசிகலா, தினகரனை நீக்க தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.

Timeline for ADMK issues

ஜெயலலிதா மறைவு முதல் இன்று வரை நடந்தது என்ன?

 • செப்.21, 2016- காய்ச்சல், நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதி
 • டிச.5 - 75 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார்
 • டிச.5- அன்றைய தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்
 • டிச.29- பொதுக் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தனர்
 • பிப்.5, 2017- சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • பிப்.7- முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ் அன்று இரவே ஜெயலலிதா சமாதியில் கண்களை மூடி கொண்டு தியானம் செய்தார். பின்னர் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
 • பிப்.14- சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
 • பிப்.15- டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா
 • பிப்.15- பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் சரண்
 • பிப்.16- சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
 • பிப்.18- ஆளுநரின் உத்தரவின் பேரில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் எடப்பாடி. இறுதியில் வெற்றி பெற்றார்.
 • மார்ச் 9- ஆர்கே நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது
 • மார்ச் 12- இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு தாக்கல் செய்தனர்
 • மார்ச் 23- அதிமுக என்ற பெயரும், கட்சிக் கொடியும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
 • ஏப். 10- வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்தினால் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது
 • ஏப்.19- தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்ததாக அமைச்சர்கள் அறிவித்தனர்
 • ஏப்.25- இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
 • மே 10- ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்டவற்றை நிறைவேற்றினால் அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை தயார் என ஓபிஎஸ் அணி அறிவிப்பு
 • ஆக.10- அதிமுக உறுப்பினர்கள் ஒன்றுகூடி துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம்
 • ஆக.14- மேலூரில் தினகரன் தலைமையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 20 எம்எல்ஏக்களும், 6 எம்.பிக்களும் கலந்து கொண்டனர்
 • ஆக.17- ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்
 • ஆக. 21- அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.
 • ஆக.28- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஆகியவற்றை மீட்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
 • செப்.11- முதல்வர் எடப்பாடி தலைமையில் கூட்டப்படும் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வெற்றிவேல் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 • செப்.12- இன்று அதிமுகவின் 2140 உறுப்பினர்கள் கொண்ட பொது குழுவும், 296 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவும் கூடியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
From Jayalalitha's death till date what are the things happen in ADMK ? Here is the timeline for the important issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற