முன்னாள் நீதிபதி கர்ணன்.... சர்ச்சைகள் முதல் கைது நடவடிக்கை வரை...நடந்தது என்ன...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் சிக்கிய சர்ச்சைகள் தொடங்கி கைது நடவடிக்கை வரை நடந்தது குறித்து டைம்லைன் இதோ...

timeline of ex justice karnan

* தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.

* கடந்த பிப்ரவரி 2016-ஆம் ஆண்டு கர்ணனை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரினார் கர்ணன்.

* தான் இடமாற்றப்படுவது குறித்து அந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கர்ணனுக்கு எந்த வித பணியும் வழங்க வேண்டாம் என்று அவரை பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* மார்ச் 2016-ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

* கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

* உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை விளக்கம் அளிக்கவும் இல்லை.

* மே 1-ஆம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொல்கத்தா அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்ணன் மறுப்பு தெரிவித்ததோடு தனது மனநிலை நிலையாக உள்ளதாகவும், இந்த பரிசோதனை உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கே தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

* மே 8-ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்
டனை விதித்ததோடு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

* கர்ணனின் தண்டனை விவரங்களால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மே 9-ஆம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்ததனர்.

* ஜூன் 12-ஆம் தேதி நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாக இருந்தபடியே ஓய்வு பெற்றார்.

* இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் இன்று (ஜூன் 20-ஆம் தேதி) கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Time line of Karnan's controversies from his arrest in Coimbatore
Please Wait while comments are loading...