For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலிண்டர் கொண்டு வரும் 'பையன்களுக்கு' டிப்ஸ் தரத் தேவையில்லை.. கேட்டால் புகார் தரலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்போது, டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் பணம் கொடுக்க தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் நேரடி மானியம் திட்டம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டரை பெற வேண்டும். மானியம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதாலும் கூடுதலாக இணைப்புகள் வைத்து சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பதும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Tip is not required for gas cylinder supply…

கேஸ் ஏஜென்சிகளே பல்வேறு தவறுகளுக்கு காரணமாக இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ‘‘கிடுக்கிப்பிடி'' போட்டுள்ளது.

ஆனாலும் கேஸ் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இன்னும் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் போது முன்பெல்லாம் ரூபாய் 10, 20 கொடுத்தால் வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு. ரூபாய் 50 கொடுத்தால் தான் சிலிண்டர் வழங்குவோம் என்று வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.

மேலும் தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூபாய் 30ம் அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூபாய் 50ம் கட்டாயம் தர வேண்டும் என்று ஊழியர்கள் பிடிவாதம் செய்கின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான பேர் வாடகை வீடுகளிலும், அடுக்குமாடிகளிலும் குடியிருக்கிறார்கள். அவர்களிடம் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். ரூபாய் 30க்கும் மேல் கொடுத்தால் மட்டுமே சிலிண்டரை வழங்குகிறார்கள். இல்லையென்றால் வாக்குவாதம் செய்து விட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இனாமாக ரூபாய் 5, 10 கொடுத்தால் அதை ஏற்பது இல்லை. ரூபாய் 50 தான் வேண்டும் என்று தகராறு செய்து வாங்கி செல்கின்றனர். அவர்கள் கேட்ட தொகையை தரவில்லை என்றால் தெரு முழுவதும் திட்டிக் கொண்டே செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சென்னையில் சிலிண்டர் வழங்கும் பையன்களின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை மிரட்டுவதும், கேவலமாக பேசுவதும் தொடர்ந்து நடக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "கேஸ் விநியோகம் செய்யும் பையன்களுக்கு டிப்ஸ் எதுவும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் சம்பளம் வழங்குகிறார்கள்.

வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால் ரூபாய் 30, 40, 50 என நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. அதனை அனுமதிக்க கூடாது.

கட்டாயப்படுத்தி பணம் கேட்டால் கேஸ் ஏஜென்சியின் பெயர், ஏரியா, விவரங்களை போன் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவரும் தங்களது பெயர் விவரங்களை கூற வேண்டும். அப்போது தான் தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் தேனாம்பேட்டையில் இதற்காக சேவை மையம் செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும நேரத்தில் பொது மக்கள் நேரிலும் வந்து எழுத்து மூலம் புகார் கொடுக்கலாம்.

இது தவிர 11800 425247247 என்ற இலவச டெலிபோன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் அந்த கேஸ் ஏஜென்சி மீதும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொது மக்கள் சிலிண்டர் விநியோகத்தின் போது கூடுதலாக பணம் கேட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tip is not required to give for the gas cylinder suppliers, Indian oil firm says to the customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X