For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பறிபோனது காவிரி நதிநீர் உரிமை.. 177.25 டிஎம்சி நீரையாவது பெற்றுத் தருமா மத்திய பாஜக அரசு?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 177.25 டிஎம்சி நீரையாவது மத்திய பாஜக அரசு பெற்றுத்தருமா? என்பதுதான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி தீர்ப்பில் தமிழகத்திற்கு வந்த ஒரே நல்ல செய்தி- வீடியோ

    சென்னை: காவிரி நதிநீர் உரிமையை உச்சநீதிமன்றத்தில் பறிகொடுத்துவிட்டு தமிழகமே பரிதவிக்கிறது. சரி... உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 177.25 டி.எம்.சி. நீரையாவது தமிழகத்துக்கு பெற்றுத்தர மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் கேள்வி.

    தமிழகத்தின் வாழ்வுரிமைகளை வஞ்சிப்பதில் காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டிக் கொண்டுதான் காலம் காலமாக செயல்பட்டு வருகின்றன. அதுவும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை அத்தனை நிலைகளிலும் வேட்டைக்காடு போல வஞ்சிக்கிறது.

    மேலாண்மை வாரிய விவகாரம்

    மேலாண்மை வாரிய விவகாரம்

    இதே உச்சநீதிமன்றம் அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்ன போது தமிழர் முதுகில் குத்தியது பாஜக அரசு. இப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்திருக்கிறது.

    காங்கிரஸ், பாஜக இரட்டை வேடம்

    காங்கிரஸ், பாஜக இரட்டை வேடம்

    இந்த அநியாய தீர்ப்பால் தமிழகமே கொந்தளிக்கிறது. ஆனால் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பட்டும் படாமலும் கர்நாடகத்தின் குரலாகவே பேசி வருகின்றனர்.

    அமைதி காக்கும் பாஜக

    அமைதி காக்கும் பாஜக

    ஆகாத பிரச்சனைகளையெல்லாம் ஊதிப் பெருக்கும் பாஜக வகையறாக்கள் தலைமுழுகும் பிரச்சனைக்கு தோள்தட்டி தொடை தட்டி வர வேண்டாம். ஜஸ்ட் குரலாவது கொடுக்க வேண்டாமா?

    நீரை பெற்று தருவார்களா?

    நீரை பெற்று தருவார்களா?

    எங்கே மைக்கை பார்த்தாலும் பொய்மாலங்களை அவிழ்த்துவிடும் பாஜகவினர் இப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 172.25 டிஎம்சி நீரையாவது திறந்துவிட கர்நாடகாவுக்கு நெருக்கடி கொடுக்கட்டும். டெல்லிக்கு படையெடுத்து போய் மத்திய அரசிடம் மன்றாட்டும். அதேபோல் காலாவதியாக போன காங்கிரஸ் கட்சியும் கர்நாடகா ஆளும் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து நீரை பெற்றுத் தருமா?

    English summary
    The Cauvery waters verdict delivered today by a three judge Bench of the Supreme Court of India. The verdict is that Karnataka will be providing 177.25 TMC to Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X