For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்... பயணிகள் பத்திரமாக மீட்பு - வீடியோ

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குற்றாலம் அருகே அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்... பயணிகள் பத்திரமாக மீட்பு - வீடியோ

    நெல்லை: ஓகி புயலின் தாக்கத்தினால் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே ஆற்றுப்பாலத்தில் பேருந்து சிக்கிக்கொண்டது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் நெல்லை டவுன் - மேலப்பாளையம் இடையிலான தரைப்பாலம் மூழ்கியது.

    TNSTC bus struggle the flood near Senkottai

    செங்கோட்டை அரிகராநதி ஆற்றுப்பாலத்தில் வெள்ளப்பெருக்கில் அரசுப்பேருந்து சிக்கியது. குற்றாலம் அருகே தூத்துக்குடி - எர்ணாகுளம் செல்லும் அரசுப்பேருந்து ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த 40 பயணிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊத்துமடம் பகுதியில் 4 கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    English summary
    Cyclonic activity battered Tirunelveli district. TNSTC bus being struggle the flood due to the Cyclone Ockhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X