டிடிவி தினகரன் அணியில் மேலும் ஒரு எம்எல்ஏ.. ஆதரவு எண்ணிக்கை 37 ஆக உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனுக்கு ஏற்கனவே 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ., ரங்கசாமியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓ.பி.எஸ். அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி என்று பிரிந்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது அணியாக டி.டி.வி. தினகரன் தலைமையில் மற்றொரு அணி உருவாகியுள்ளது.

Today Thanjavur MLA rengasamy has extended his support to Dinakaran
CM Edappadi Palanisamy Heads Ministers Meeting In Secretariat | Oneindia Tamil

இந்நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி தஞ்சாவூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ரங்கசாமி இன்று தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA's extended their support to TTV Dinakaran increases.Today Thanjavur MLA rengasamy has extended his support to Dinakaran.
Please Wait while comments are loading...