பாம்பன் பாலத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 30 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாப் பேருந்து ஒன்று ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் பாம்பன் பாலத்தின் மீது பேருந்து சென்றது.

Tourist bus met with an accident in Pambam bridge

அப்போது ஓட்டுநர் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் மீது கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநர் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாம்பன் பாலம் ரப்பரால் அமைக்கப்பட்டிருப்பதே அடிக்கடி விபத்து நேரிட காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tourist bus met with an accident in Pambam bridge. In this Accident over 30 injured including Driver.
Please Wait while comments are loading...