அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்… டிடிவி தினகரன் மீண்டும் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

TTV Dinakaran appoints loyalists to Union

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக எம். ராஜ்குமார், இணைச் செயலாளர்களாக வி.ஆலடி, கே.மகாலிங்கம், வி.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் பொறுப்பில் இருந்து டி.நாகராஜன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ். சோமசுந்தரம் ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக ஈ. தனபால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக என். விஜய்பாபு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவராக எம்.சின்னசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவராக டி.இளங்கோவன், மாவட்டச் செயலாளராக ஏ.பி. முருகேசன், புதுக்கோட்டை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக எஸ். சோமசுந்தரம், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவராக பி.பேயத்தேவர், மாவட்டச் செயலாளராக என். பால்பாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.சக்திவேல், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருப்பூர் மண்டல அண்ணா தொழிற்சங்கத் தலைவராக டி. ரவீந்திரன் - செயலாளராக எஸ். தங்கவேல், பொருளாளராக என். பொன்னுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டல அண்ணா தொழிற்சங்கத் தலைவராக எஸ். திப்பன், செயலாளராக ஆர். பிரபாகரன், பொருளாளராக கே. ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவராக வி. நாகேஷ், செயலாளராக ஜி. பாஸ்கரன், பொருளாளராக ஜோசப் சுந்தர்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகப்பட்டினம் மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவராக பி. சந்தானம், செயலாளராக டி. முருகேசன், பொருளாளராக ஜி. முருகானந்தம் ஆகியோரும், தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கத் தலைவராக ஏ. சுபான், செயலாளராக ஜெ. பொன்னுராஜ், பொருளாளராக பி. வேல்பாண்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவராக ஏ. சகாயராஜ், செயலாளராக என். முருகேசன், பொருளாளராக எஸ். சந்தனராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவராக எஸ்.கே. ரமேஷ், மாவட்டச் செயலாளராக வி.பி. முரளி, மாவட்ட பொருளாளராக ஜெ. பால்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்கத் தலைவராக பி. சந்தானம், செயலாளராக என். கார்த்திக், பொருளாளராக எம். ஐயப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்க பொருளாளர் டி. நாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ். சோமசுந்தரம் ஆகியோர் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக எம். ராஜ்குமார், துணைச் செயலாளர்களாக கே. நாகராஜ், பாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்க பொருளாளராக ஏ. கணபதியும், விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்க பொருளாளராக பி. முருகேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக வி. நாகசேகரன், துணைச் செயலாளராக என். சீனிவாசன் ஆகியோரும், புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளராக எம். மதியழகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவராக என். சிவபாண்டியன், துணைச் செயலாளராக டி. கருப்பத்தேவன் - திண்டுக்கல் மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவராக எம். சேகர், செயலாளராக என். நாராயணசாமி, பொருளாளராக ஜி. ரெகுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவராக ஆர். பகவதி முருகன், துணை செயலாளர்களாக ஆர். நாட்டரசு, பி. ஆறுமுகம், மூக்கையா, நயினார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அஇஅதிமுக அம்மா அமைப்புச் செயலாளராக டி. ராதாகிருஷ்ணன், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்களாக எம்.ஜி. முத்தையா, இ.லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம் | FERA violation case against Dinakaran- Oneindia Tamil

கழக அமைப்புச் செயலாளராக டி.ராதாகிருஷ்ணன் எம்.பி., கழக அனைத்துலக எம்.ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சிவ.குற்றாலம், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக பி.ஜி. ராஜேந்திரன், எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்களாக எம்.ஜி. முத்தையா, இ.லெட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran has appointed his loyalists to Anna Trade Union today.
Please Wait while comments are loading...