பாலாற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் அநியாய பலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஆம்பூர் அருகே பள்ளிச் சிறுவர்கள் இருவர் பாலாற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகேயுள்ளது தேவாலபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த நிர்மல்குமார், குருநாதன் ஆகிய சிறுவர்கள் நான்காம் வகுப்பில் படித்து வந்தனர்.

Two school going children died near Ambur

சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் இரண்டு சிறுவர்களும் பாலாற்றில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, நீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடலை பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மீட்டனர். இரண்டு பள்ளிச் சிறுவர்கள் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ள காரணத்தால் தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் சிறுவர்கள், மாணவர்கள் செல்லக் கூடாது என பெற்றோரும் ஆசிரியரும் அறிவுறுத்த வேண்டும் என அவ்வூர் பொதுமக்கள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Ambur two school going children went to play in palaru river and died.
Please Wait while comments are loading...