For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் பரவும் மர்மக்காய்ச்சல்... பீதியில் மக்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு மாதமாக நல்ல மழை பெய்தது. தற்போது பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த அதிரடி கால நிலை மாற்றத்தால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

Unknown fever spread over Nellai district

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் 10 நாட்கள் வரை சிகிச்சை பெற வேண்டியுள்ளது. மேலும் தலை வலி, உடல் வழி அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

குளிரால் உடல் நடுக்கமும் காணப்படுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவருக்கும் காய்ச்சல் தொற்றி கொள்வதாக கூறப்படுகிறது.

இது ஒரு வகை வைரஸ் காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் தண்ணீர் சரியாக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது.

இதனால் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகி அதன்மூலம் காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மழை நீரை வடிய வைத்து மருந்துகள் தெளித்து சுகாதார நடவடிக்கையை முடக்கி விட பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

English summary
An unknown fever spread over Nellai district. People feared about this viral fever and district health department going take action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X