For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை ஆதரிக்க கோரி ரஜினியை நேரில் சந்தித்த வைகோ! ஜெத்மலானியின் தூதராக சென்றார்!!

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் தூதராக நடிகர் ரஜினிகாந்தை கடந்த 6-ந் தேதி மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று சென்னை வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இது தனிப்பட்ட சந்திப்பு என்றும் இதில் அரசியல் பேசவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த வாரமே மோடியை ஆதரிக்க வலியுறுத்தி ஒரு மணிநேரம் ரஜினியை சந்தித்து பேசியதாக தெரிவித்து 2 புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Vaiko met Rajinikanth

வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

2014 ஏப்ரல் 6-ந் தேதியன்று வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லம் சென்றார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைகோ ஏப்ரல் 6 ந்தேதியன்று பகல் 12.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை தலைவர் வைகோ சுப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கொடுத்தார்.

இவ்வாறு வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
MDMK leader Vaiko said that he met Superstar Rajinikanth in Chennai on April 6th in his facebook page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X