கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

நாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று மாலை முதலே வெளியூர்களுக்கு கிளம்ப தொடங்கினர்.

Vijayabaskar examined at Omni bus station in Koyambedu, Chennai

இதையடுத்து மாலை முதல் இரவு வரை நகரின் பல இடங்களில் அதிலும் குறிப்பாக கோயம்பேட்டை சுற்றியுள்ள பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் கொள்ளை லாபம் அடிக்க டிக்கெட் விலையை கூட்டுவது வழக்கம் என்பதால், அவ்வாறு செய்ய கூடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இரு தினங்கள் முன்பு எச்சரிக்கைவிடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பது குறித்து இன்று இரவு சுமார் 10.30 மணியளவில் கோயம்பேடு பகுதியில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகளும் உடனிருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport Minister Vijayabaskar examined at Omni bus station in Koyambedu, Chennai.
Please Wait while comments are loading...