சத்யராஜுக்காக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்?.. அமைச்சர் வேலுமணி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: நடிகர் சத்யராஜுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, அவருக்காக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காதது ஏன் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் சிஸ்டம் கெட்டுப் போச்சு பேச்சு பலவிதமான விவாதங்களையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். அப்போது அவர் ரஜினிக்கு சில கேள்விகளை வைத்தார்.

அமைச்சர் எஸ்பி வேலுமணி

அமைச்சர் எஸ்பி வேலுமணி

வேலுமணி கூறுகையில், "காவிரிப் பிரச்சினையின்போது அனைவருமே மாநில நலனுக்காக குரல் கொடுத்தோம். அரசும் கொடுத்தது, கட்சிகளும் கொடுத்தன. அதேபோல நடிகர் சத்யராஜும் குரல் கொடுத்தார்.

சத்யராஜூக்கு சிக்கல்

சத்யராஜூக்கு சிக்கல்

தமிழகத்தின் உரிமைக்காகத்தான் அனைவருமே குரல் கொடுத்தோம். கர்நாடகத்தைக் கண்டித்தோம். அதேபோலத்தான் சத்யராஜும் குரல் கொடுத்திருந்தார். ஆனால் அவர் நடித்த பாகுபலி படம் வெளியாக விடாமல் கர்நாடகத்தில் தடுத்தனர்.

அப்போ பேசலயே

அப்போ பேசலயே

கர்நாடகத்தில் சத்யராஜுக்காக போராட்டம் நடத்தினர். அவரை கண்டித்தனர். அப்போது சத்யராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும். பேசிருக்க வேண்டும்.

சிஸ்டம் நல்லாயிருக்கு

சிஸ்டம் நல்லாயிருக்கு

தமிழகத்தில் சிஸ்டம் எல்லாம் கெடவில்லை. நன்றாகவே உள்ளது. வட மாநிலங்களை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இதனால்தான் பிற மாநிலத்தவரும் கூட இங்கு வர ஆசைப்படுகின்றனர்" என்று கூறினார் வேலுமணி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Minister SP Velumani has asked Rajinikath why the actor failed to defend his fellow actor when he was gagged by Karnataka movements.
Please Wait while comments are loading...