For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ்-க்கு எதிராக தம்பிதுரை கலகக் குரல் எழுப்புவதன் பின்னணி இதுதான்..

சசிகலா முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை. ஓ பன்னீர்செல்வத்துடனான பனிப்போரின் உச்சமாகவே இந்த அறிக்கையை தம்பிதுரை கொடுத்திருக்கிறாராம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதன் மூலம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. பன்னீர்செல்வத்துடனான பனிப்போரின் உச்சமாகவே இக்கோரிக்கையை தம்பிதுரை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவின் போது முதல்வர் பதவிக்கு தம்பிதுரை பெயரும் அடிபட்டது. ஆனால் மத்திய அரசு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தியது. இதனால் பன்னீர்செல்வம் முதல்வரானார்.

பன்னீர்செல்வம் முதல்வரானாலும் அவரை பின் தொடர்ந்தவராக தம்பிதுரை வலம் வந்தார். டெல்லிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் சென்றபோது கூடவே இருந்தார் தம்பிதுரை. பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் தம்பிதுரை உடனிருந்தார்.

வெளியே அனுப்பிய ஓபிஎஸ்

வெளியே அனுப்பிய ஓபிஎஸ்

இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு மோடியும் பன்னீர்செல்வமும் தனியே 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சசிகலா தரப்பு தமக்கு தரும் நெருக்கடிகளை மோடியிடம் பன்னீர்செல்வம் விவரித்திருக்கிறார்.

அதிருப்தியில் தம்பிதுரை

அதிருப்தியில் தம்பிதுரை

அதே நேரத்தில் டெல்லியில் கோலோச்சும் தம்மை அதுவும் லோக்சபா துணை சபாநாயகராக இருக்கும் தம்மை வெளியே அனுப்பியதை தம்பிதுரையால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் தம்பிதுரை.

கலகக் குரல்

கலகக் குரல்

தற்போது அமைச்சர்கள் சிலரே பன்னீர்செல்வத்துக்கு எதிராக சசிகலாவே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு தம்மை அவமதித்த பன்னீர்செல்வத்தை பழிவாங்கும் வகையில் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டு கலகக் குரலை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை.

ராஜினாமா செய்யுங்க

ராஜினாமா செய்யுங்க

கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடம் இருக்கக் கூடாது என தம்பிதுரை கூறியுள்ளார். அதாவது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தி தமது கோபத்தை தணித்திருக்கிறார் தம்பிதுரை.

English summary
Here the reasons behind the Lok Sabha Deputy Sepaker Thambidurai's revolt against Tamilnadu Chief Minsiter O Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X