பென் டிரைவில் ஒளிந்திருக்கும் ஜெ. உயில்.. அப்பல்லோ சிகிச்சை வீடியோ.. ரெய்டுக்கான பரபர பின்னணி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.சசியின் பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்கள்..வீடியோ

  சென்னை: வருமானவரித்துறை அதிகாரிகள் விடாது தேடுவது ஜெயலலிதா உயில் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  டிடிவி தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 135 இடங்களில் இன்றும் வருமான வரி சோதனை நீடிக்கிறது.

  இந்த சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின் ஆவணங்களும், முதலீடுகளின் முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் அதிகளவில் சிக்கியது.
  இவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி மதிப்பு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  பென்டிரைவ் சிக்குமா?

  பென்டிரைவ் சிக்குமா?

  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்கள், சொத்துகள் பற்றிய தகவல் கிடைத்ததாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டிலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேஷ், திவாகரனுக்கு சொந்தமான இடங்களிலும் சிடி, பென் டிரைவ், சிப், மெமரி கார்டு, எலக்ட்ரிக் ஃபைல் உள்ளிட்டவற்றை தேடியுள்ளனர்.

  இளவரசியின் வாரிசுகள்

  இளவரசியின் வாரிசுகள்

  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகம் நெருக்குவது இளவரசியின் மகனும், ஜெயா டிவி இயக்குநருமான விவேக்கின் வீடுதான். விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்ரியா, மாமனார் பாஸ்கர், உறவினர்கள், நெருக்கமானோரின் வீடுகளில் அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

  ஜெயலலிதா உயில்

  ஜெயலலிதா உயில்

  விவேக், கிருஷ்ணப்ரியா, சிவக்குமார், வெங்கடேஷ், திவாகரனிடம் சொத்துகள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் விசாரித்தனர். அதை விட முக்கியமாக அதிகம் விசாரித்தது ஜெயலலிதா சிகிச்சை பற்றிய வீடியோவும், அவர் எழுதியதாக கூறப்படும் உயில் பற்றியும்தானாம்.

  உயில் பற்றிய கேள்வி

  உயில் பற்றிய கேள்வி

  ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமான நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், அவரது உதவியாளர்களிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு எங்கெங்கு சொத்துகள் உள்ளன? யார் பெயரில் அவை உள்ளன? கடைசியாக எழுதிய உயில் எங்கே? என்பதுதான் முக்கிய கேள்வியாக இருந்ததாம்.

  விசாரணை என்ன?

  விசாரணை என்ன?

  ஜெயலலிதா உயில் எழுதினாரா? அந்த உயில் எங்கே? யாரிடம் இருக்கிறது எனவும் கேள்வி கேட்டுள்ளனர்.
  அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்கள் பற்றியும், சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்பட ஆதாரங்களை பற்றியும் விசாரித்துள்ளனர். இதற்கு சிவக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர் தெரியாது என்றே பதில் கூறியுள்ளனர்.

  கட்டம் கட்டும் வருமான வரித்துறை

  கட்டம் கட்டும் வருமான வரித்துறை

  பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, இதே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியும், அவரது கடைசி உயில் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடி பற்றியும் வருமான வரித்துறையினர் விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தினகரன் உதறல்

  தினகரன் உதறல்

  ரெய்டு நடந்த நாளன்று தில்லாக பேட்டி கொடுத்த டிடிவி தினகரன், இன்று மத்திய, மாநில அரசுகளை சாடி பேட்டி கொடுத்தாலும் சற்றே உதறலுடன்தான் காணப்பட்டார். காரணம், வருமான வரித்துறையினர் விடாமல் துருவி துருவி உயில் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் கேட்பதனால்தான்.

  முடக்க திட்டம்?

  முடக்க திட்டம்?

  ஜெயாடிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை அரசுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளார் டிடிவி தினகரன். இவற்றை பற்றி ஜெயலலிதா உயிலில் எதுவும் எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதும் இந்த ரெய்டின் முக்கிய நோக்கமாகும். ஆபரேசன் பிளாக் மணி என்று கூறப்பட்டாலும், இது சசிகலா, தினகரனுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்ஜிகல் தாக்குதல் என்பது அவர்களின் ஆதரவாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sources say the IT officials are searching for the will of late CM Jayalalitha and her treatment CDs at Apollo hospitals.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற